தலையில் செம்பு வைத்து நூதன முறையில் மனு

தலையில் செம்பு வைத்து நூதன முறையில் மனு

கணேஷ் பாபு

மதுரை அருகே முள்ளிப்பள்ளத்தில் குளியல் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரி சட்டையின்றி தலையில் தண்ணீர் சொம்புடன் வந்து மனு அளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இங்கு உள்ளவர்கள் யாரேனும் இயற்கை எய்தினால் சம்பராதயபடி நீர் மாலை எடுக்கவும், குளித்து வரவும் தண்ணீர் தொட்டி இல்லாமல் அவதிப்பட்டுவருகின்றனர்., இதனால் சாலைகளில் நடுவே அமர்ந்து தண்ணீர் பைப்புகளை பயன்படுத்தி குளித்துசெல்லும் நிலை உள்ளது இதனால் கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தொட்டி என்ற பொது தொட்டியில் தான் குளித்து நீர்மாலை எடுத்தும், இறுதி சடங்கு முடித்தும் குளித்துச்செல்லும் நிலை இருக்கிறது.

இந்நிலையில் முள்ளிப்பள்ளம் பகுதியில் அரசு சார்பில் புதிய குளியல் தொட்டி அமைப்பதற்கான வேலைகளும் துவங்கிய நிலையில் தற்போது அந்த வேலையை ஊராட்சி மன்ற நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் நிறுத்திவிட்டார்கள். எனவே குளியல் தண்ணீர் தொட்டி கட்டி தரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டி மதுரையை சேர்ந்த தன்னார்வலரான கணேஷ் பாபு என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு மேல் சட்டையின்றி தலையில் தண்ணீர் நிரப்பிய சொம்புடன் நூதன முறையில் வந்து மனு அளித்தார்

. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூதன முறையில் மனு கொடுக்க வந்த நபரை பார்த்த காவல்துறையினர் அவரை அழைத்துசென்றனர். இது குறித்து பேசிய தன்னார்வலர் கணேஷ்பாபு : முள்ளிப்பெல்லாம் பகுதியில் குடிநீர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது அதிகாரிகளால் முடக்கப்பட்டு இருக்கிறது எனவே பணிகளை விரைந்து நடத்த வேண்டும் இதேபோன்று மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவிற்கு மாடுகள் சாலைகளில் சுற்றிதிரிவதால் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நிலை உருவாகிறது இதேபோன்று மதுரையில் பைபாஸ் பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தெரிவித்தார் தனது மனு மீது உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முள்ளிப்பள்ளம் பகுதிக்கு குளியல் தண்ணீர் தொட்டியை விரைந்து கட்டி தர வேண்டும் என தெரிவித்தார் அதற்காக இது போன்ற நூதன முறையில் தற்போது மணி அளிக்க வந்துள்ளதாக குறிப்பிட்டார்

Tags

Next Story