மருந்தக உரிமையாளர் மாயம் - தந்தை புகார்

மருந்தக உரிமையாளர் மாயம் - தந்தை புகார்
காவல் நிலையம் 
விருதுநகரில் மருந்து கடை வைத்து நடத்தி வரும் மகனை காணவில்லை என அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திரவியநாதபுரம் பகுதியை சார்ந்தவர் பார்த்திபன் வயது 49 இவர் விருதுநகரில் தனியார் மருந்து கடை ஒன்று நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் அதிக அளவில் கடன் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒன்பதாம் தேதி அவருடைய தந்தை ரஞ்சித் சிங் மகனை கடையில் விட்டுச் சென்றதாகவும் மதியம் வீட்டிற்கு மகன் வராததால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உள்ளார். தொலைபேசியை கடையில் வேலை பார்க்கும் வேறு ஒரு நபர் எடுத்ததாகவும் போனை வைத்துவிட்டு வெளியே அவர் சென்று விட்டதாக கடையில் வேலை பார்க்கும் நபர்கள் தந்தையிடம் கூறியுள்ளனர். போனை வைத்துவிட்டு வெளியே சென்ற நபர் தற்போது வரை வீடு திரும்பாத காரணத்தினால் மகனை கண்டுபிடித்து தரக் கூறி ரஞ்சித் சிங் என்பவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story