தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட, முதுநிலை மாணவர் கருத்தரங்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட, முதுநிலை மாணவர் கருத்தரங்கம்

கருத்தரங்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட, முதுநிலை மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏப்.15, 16 (திங்கள், செவ்வாய்) ஆகிய இரு நாள்கள் முனைவர் பட்ட, முதுநிலை மாணவர் கருத்தரங்கம் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில், "மாணவர்கள் ஆய்வுத் திறனை வளத்துக்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவதுபோல இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்குவதற்காக இக்கருத்தரங்கின் நோக்கம்" என்றார். தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலைத் தொல்லியல் மாணவர்களும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள், இனவரைவியல் ஆய்வுகள் அடிப்படையிலான தங்களது கட்டுரைகளை வாசித்தனர். குந்தவை நாச்சியார் கல்லூரியின் பணிப்பயிற்சி பெறும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி ஆஸ்லின் காருண்யா, திருநெல்வேலி தருவை அருகே கண்டுபிடித்த 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த அணைக்கட்டுக் கல்வெட்டு ”அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு” என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இது மருதநாயகம் எனப்படும் யூசுப்கானைக் குறிக்கலாம் எனக் கருதப்படுகிறது. கருத்தரங்கின் தொடக்க விழாவில் தமிழ்ப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் சி தியாகராசன், துறைத் தலைவர் முனைவர் வீ.செல்வகுமார், வருகைதரு பேராசிரியர் கி.இரா.சங்கரன், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவிப்பேராசிரியர் கோ.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story