பேச்சிப்பாறையில் அரசின் அனைத்து துறைகளின் புகைப்படக்கண்காட்சி 

பேச்சிப்பாறையில்  அரசின் அனைத்து துறைகளின் புகைப்படக்கண்காட்சி 
பேச்சிப்பாறையில் அரசின் புகைப்பட கண்காட்சி
பேச்சிப்பாறையில் அரசின் அனைத்து துறைகளின் புகைப்படக்கண்காட்சி  நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான அனைத்து திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சந்தித்தது, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியது, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தது, கோவிட் காலகட்டத்தில் கணவனை இழந்தவர்களுக்கு தனியார் பங்களிப்புடன் நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது.

புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags

Next Story