கன்னியாகுமரி: அரசு சார்ப்பில் புகைப்பட கண்காட்சி

கன்னியாகுமரி: அரசு சார்ப்பில் புகைப்பட கண்காட்சி
அரசின் புகைப்பட கண்காட்சி
ஆர்வமுடன் மக்கள் கண்டுகளித்தனர்

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட ஆலன்விளை பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும், தமிழக முதல்வரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற ஸ்ரீதர், நேரில் சந்தித்தது, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

Tags

Next Story