புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த புகைப்பட கண்காட்சி

புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த புகைப்பட கண்காட்சி

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு

சேலத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி விம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கதிரியக்கவியல், கதிரியக்க சிகிச்சை, அணுக்கரு மருத்துவ பிரிவானது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நடத்தியது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

முன்னதாக பல்வேறு வகையான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் பஸ் நிலையத்தில் நிறுவப்பட்ட புகைப்பட கண்காட்சியை சேலம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கலால் அலுவலக உதவி ஆணையர் மாறன், தாசில்தார் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

புகைப்பட கண்காட்சியில் தொடர்ந்து துறையின் மாணவர்களின் விழிப்புணர்வு நடனமும், மவுனமொழி நாடகமும் நடந்தது. போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை துறையின் கதிரியக்கவியல் பிரிவின் பொறுப்பாளர் கலைவாணி, உதவி பேராசிரியர்கள் ஆண்டனி ரூபன், ஷகினா, கார்த்திக்ராஜா, சித்ரா, அல்போன்ஸ் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், ஹரிஷ்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags

Next Story