போட்டோ ஸ்டுடியோவை உடைத்து பொருட்கள் கொள்ளை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே போட்டோ ஸ்டுடியோ கடையை உடைத்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான கேமரா, பொருட்கள் கொள்ளை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் சின்ன கல்லுப்பள்ளி பகுதியில் ஆர் .டி. ஒ ஆபிஸ் அருகே திருப்பத்தூர் சாலை ஒட்டி போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பணிகளை முடித்து கொண்டு சரவணன் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த கேமரா, ம லேப்டாப், மற்றும் ரூ.1500 ரொக்க பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து கடையை பாதியளவு திறந்து விட்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று காலை கடை பாதி அளவு திறந்திருப்பதை கண்ட அப்பகுதி சேர்ந்தவர்கள் கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்து பார்த்த போது சரவணன் கடையை பாதியளவு திறந்து கிடப்பது பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது ரூ 1.50 லட்சம் மதிப்பிலான கேமரா, லேப்டாப் , 1500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் சரவணன் இக்கொள்ளைச்சம்பவம் இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பத்தூர் செல்லும் பிரதான சாலையை ஒட்டி உள்ள கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடையின் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.