இளையான்குடியில் இயற்பியல் கருத்தரங்கம்

இயற்பியல் கருத்தரங்கம்



சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பாக அறிவியல் அறிவியல் கருவிகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் 07.03.2024 அன்று நடைபெற்றது. துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் செய்யது அபுதாஹிர் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி, மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், மேனாள் அறிவியல் அறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு இயற்பியல் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் அறிவியல் கருவிகள் குறித்து பேசினார். நிகழ்வினை உதவிப்பேராசிரியை ஹெலன் தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் கலீல் அகமது நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர்கள் காஜாமுஹைதீன் மற்றும் ராதா ஆகியோர் செய்திருந்தனர்.




