மது பாரில் பிசியோதெரபி டாக்டர் குத்தி கொலை

மது பாரில் பிசியோதெரபி டாக்டர் குத்தி கொலை
கொலையுண்ட பிசியோ டாக்டர் சுனில் .
களியக்காவிளை அருகே புத்தாண்டு கொண்டாட சென்ற போது பார் ஊழியருடன் ஏற்பட்ட தகராற்றில் பிசியோதெரபி டாக்டர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள கூட்டப்புளி பகுதியை சேர்ந்தவர் சுனில் (45) பிசியோதெரபி டாக்டர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கோழிவிளை அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் சுனில் தனது நண்பருடன் புத்தாண்டு கொண்டாட கோழிவிளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள பாருக்கு சென்றுள்ளார். அப்போது தின்பண்டங்கள் கேட்டதில், சுனிலுக்கும் பார் ஊழியர் சங்கரன் ( 46) -க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கரன் அங்கு கிடந்த கத்தியால் சுனில் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு, சங்கரன் தப்பி ஓடியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குழித்றை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் பரிசோதனை டாக்டர்கள் சுனில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக கனியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story