நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்கினார் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி

நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்கினார் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி

நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்

கீழ்பென்னாத்தூரில் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். நரிக்குறவர் இனமக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இருந்து வந்ததை பழங்குடியினர் வகுப்பாக மாற்றப் பட்டது.

இதையொட்டி கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் கீழ்பென்னாத்தூர் கண்ணகி நகர்,வேட்டவலம் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கும் விழா கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், நகர தி.மு.க செயலாளர் அன்பு, அட்மா ஆலோசனைக் குழு தலைவர் சிவக்குமார், பேரூராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாசில்தார் சரளா வரவேற்றார். விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு நரிக்குறவர் இன வகுப்பைச் சேர்ந்த பயனாளிகள் 123 பேருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை வழங்கியும் பேசினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா,தலைமையிடத்து துணை தாசில்தார் சீத்தாராமன்,மண்டல துணை தாசில்தார் மாலதி,வட்ட வழங்கல் அலுவலர் ஜான்பாஷா, தேர்தல்பிரிவு துணை தாசில்தார் தனபால், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் நந்தகோபால், அரிகிருஷ்ணன்,கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகரன், எ .பிரவீன்குமார், ஜாய் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story