தோவாளையில் பிச்சிப்பூ விலை உயர்வு 

தோவாளையில் பிச்சிப்பூ விலை உயர்வு 
தோவாளை பூமார்க்கெட்டில் பிச்சிப்பூ விலை உயர்ந்து கிலோ ரூ. 2000 க்கு விற்பனையானது. 
தோவாளை பூமார்க்கெட்டில் பிச்சிப்பூ விலை உயர்ந்து கிலோ ரூ. 2000 க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூ சந்தை தோவாளையில் உள்ளது. இங்கு தற்போது சுபமுகூர்த்த தினங்களை ஒட்டி ஒரு கிலோ பிச்சிப்பூ ரூபாய் இரண்டாயிரத்திற்கும், உள்ளூர் அரளி ரூபாய் 250க்கும், சேலத்து அரளி ரூ 200-க்கும், சம்பங்கி 150-க்கும் மஞ்சள் கிரந்தி 140க்கும் சிவப்பு கிரந்தி 150 க்கும், கனகாம்பரம் ரூ. 600க்கும், பட்டர் ரோஸ் 160 க்கும், ரோஜா ரூ 40 க்கும், மரிக்கொழுந்து ரூ 150 க்கும், கோழி கொண்டை ரூபாய் நூறுக்கும், தாமரை ரூ 4 என மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் மல்லிகை பூவுக்கு போதிய விலை இல்லை. காரணம் வெயில் நேரம் பூத்துக் குலுங்குகிறது.

தேவைக்கு அதிகமாக மல்லிகை பூக்கள் தற்போது சந்தைக்கு வருவதால் விலை குறைந்து காணப்படுகிறது. ரூபாய் 200 முதல் 500க்கும் விற்பனையாகி வருகிறது. இதனால் மல்லிகை பூ விவசாயிகள் பூப்பறிக்கும் செலவு கூட விற்பனையாகவில்லை என்பதால் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அதேபோல் கேரளாவில் அரளிப்பூவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அரளி பயிரிடும் விவசாயிகள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story