மறியல் போராட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பாக புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமையில், புதிய ஒய்வூதியத் திட்டத்தை தேர்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், சிக்கிம் மாநிலங்கள் ரத்து செய்துள்ள நிலையில், தமிழக தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது போல் புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இந்தியாவில் சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து இறந்த மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை கொடுக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே, எனவே தமிழக அரசு இதனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கு உடனடியாக பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பின்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பின்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100 க்கும் மேற்பட்டோரை சூலக்கரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Tags

Next Story