மறியல் போராட்டம்
ராமநாதபுரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம், மறியல் செய்தவர்களை குண்டு கட்டாக தூக்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்ததால் பரபரப்பு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 6 அம்ச கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டம் ஆர்ப்பாட்டம் மறியல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை புறநகர் கிளை முன்பு சி ஐ டி யு தொழிற்சங்கம் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் ஆகிய தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நோக்கி சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
அப்போது காவல்துறையினர் சிஐடியு தொழிற்சங்கத்தினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மறியலுக்கு முயற்சி செய்தவர்களை கை,கால் களை பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவாஜி கூறுகையில் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் தொடர்ச்சியாக சாலை மறியல் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போன்ற பல்வேறு கட்டமான போராட்டங்களை தமிழக அரசு சந்திக்கும் சூழல் உருவாகும் ஆகவே உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்.
போலீசார் வேண்டும் என்றே எங்களை பிடித்து இழுத்து சித்திரவதை செய்து வாகனத்தில் கைது செய்கின்றனர் நாங்கள் கைது ஆவதற்கு தயாராக தான் வந்தோம் இதுபோன்ற செயல்கள் காவல் துறையை கண்டிக்கத்தக்கதாகும் இது போன்ற பிரச்சனைகளை வரும் காலங்களில் காவல்துறை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்