மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த பன்றிக்குட்டிகள்

மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த பன்றிக்குட்டிகள்

ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த பன்றிக்குட்டிகள், 

ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த பன்றிக்குட்டிகள், நாய்கள் துரத்தியதால் கிணற்றுக்குள் விழுந்தன.

சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி மலைஅடிவார பகுதியில் உள்ள ஊருக்குள் வருவது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் சேர்வராயன் தெற்கு வளசரகத்துக்கு உட்பட்ட பன்னிகரடு காப்புக்காடு பகுதியில் இருந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள சக்கரை செட்டியப்பட்டி கிராமத்திற்குள் 5 பன்றி குட்டிகள் வழி தவறி வந்துள்ளன. பன்றி குட்டிகளை கண்ட நாய்கள் அதை விரட்டி சென்றன. அருகில் உள்ள மணி என்பவரது விவசாய கிணற்றில் பன்றி குட்டிகள் விழுந்துள்ளன.

அதிகாலை நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் அரவிந்த் என்ற வாலிபர் எழுந்து பார்த்துள்ளார். அவர் கிணற்றை எட்டிப்பார்த்த போது அங்கு 5 பன்றிக்குட்டிகள் தண்ணீரில் தத்தளித்துள்ளன. உடனே சேலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். வனத்துறையினர் விரைந்து வந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்த அரவிந்த், கோபி, இளங்கோ, பாரதி, திருமுருகன் மற்றும் வன காப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் அந்த பன்றிக்குட்டிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் பன்றிக்குட்டிகள் கூண்டில் அடைக்கப்பட்டு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. தண்ணீரில் தத்தளித்த பன்றிக்குட்டிகளை மீட்க உதவிய இளைஞர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story