வைகாசி விசாகப் பெருவிழாவில் திருத்தேரோட்டம்
தென்காசி மாவட்டம், சிந்தாமணி மீனாட்சி அம்பிகை அம்பாளுக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சிந்தாமணி அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான மீனாட்சி அம்பிகா சமேத சொக்கலிங்க சுவாமி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத் திருவிழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இதில் மீனாட்சி அம்பிகா அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story