திருத்தணி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல தடை

திருத்தணி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல தடை

திருத்தணி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி மலைப்பாதையில் சீரமைப்புப் பணிகள் காரணமாக, பக்தர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையின் தடுப்புச் சுவர் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 5ஆம் தேதி மலைச்சரிவு ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக அனைத்து ரக வாகனங்கள் செல்ல 11.12.2023 முதல் 16.12.2023 வரை தடைவிதிக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை மற்றும் படிவழியில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இலேசாக மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் மற்றும் பொதுமக்ள்ள நலன் கருதி மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதியில்லை.

14.12.2023 முதல் 20.12.2023 வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல படிவழியினை பயன்படுத்திக்கொள்ள திருக்கோயில் நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story