திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம்; போக்குவரத்து பாதிப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம்; போக்குவரத்து பாதிப்பு

 திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையாரை தரசிக்கவும், அண்ணாமலையை வலம் வரவும் விடுமுறை தினத்தில் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வார விடுமுறை தினம் என்பதால் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக் கான வாகனங்களில் பக்தர் கள் கிரிவலம் செல்லவும், அண்ணாமலையாரை தரிசனம் செய்யவும் திருவண்ணாமலை நகரில் முகாமிட்டனர். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக அண்ணாமலையார் கோயில் மாடவீதி, பெரியார் சிலை சந்திப்பு, கற்பக விநாயகர் கோவில் சந்திப்பு, தேரடி வீதி, சன்னதி தெரு, மத்தலாங்குளத் தெரு, சின்னகடைத் தெரு, பேருந்து நிலை யம் எதிரில் உள்ள பிரதான சாலை ஆகிய இடங்களில் -அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பிலும், திருவண்ணா மலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் உரிய இடம் அமைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வாகனம் நிறுத்துவதற்கு இடம் தேடி அலைந்து பின்னர் நகரின் வெளிப்புறம் உள்ள சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி சென்றனர்.

மாவட்ட நிர்வாகம் அல்லது கோயில் நிர்வாகம் சார்பில் போதிய அளவிற்கு வாகன நிறுத்துமிடம் அமைத்துத் தர வேண்டும் என்பது அண்ணாமலை யாரை தரிசிக்க வரும் ஆன்மீக பக்தர்களின் வேண்டு கோளாக உள்ளது. அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களின் எண்ணிக்கைஅதிகஅள வில் காணப்பட்டது.. அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சாலையோர உணவகம் மற்றும் பலவகையான உணவகங்களிலும் பக்தர்கள்கூட்டம் அலைமோதியது.

கிரிவலப்பாதை தூய்மையாக பராமரிக்கப்படுவதால் கால்களில் காலணி அணியாமல் செல்லும் பக்தர்கள் எவ்வித சங்கடங்கள் இன்றி அண்ணாமலையை வலம் வந்தனர். •

Tags

Next Story