மகா சக்தி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மகா சக்தி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

பெரம்பலூர் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம் சென்றனர்.


பெரம்பலூர் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம் சென்றனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரியில் பெரிய மாரியம்மன், மகா சக்தி மாரியம்மள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பால்குடத்தை தலையில் சுமந்து பம்பை, உடுக்கையுடன் ஊர்வலமாக மகா சக்தி மாரியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பக்தர்கள் சிலர் அக்னி சட்டியை கையில் ஏந்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரா தனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பொங்கலிட்டு, மாவிளக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவர்களான பெரிய மாரியம்மன், மகா சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

Tags

Next Story