குழாய் உடைப்பு சீரமைக்க கோரிக்கை!
திருமயம் அரசு மருத்துவமனை முன்பு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
திருமயம் அரசு மருத்துவமனை முன்பு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
திருமயம் அரசு மருத்துவமனை முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி சாலையோரம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story