பொன்னமராவதி சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சிவன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. மிகப் பழமையானதும், தொல்லியல்துறை கோயிலுமான இக்கோயிலில் சிவாச்சாரியார்களால் கோயில் முன்பு உள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Next Story