நாமக்கல் அருகே பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் தூக்குத்தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் அருகே பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் தூக்குத்தோ் வெள்ளோட்டம்


நாமக்கல் அருகே ஒருவந்தூா் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் புதிய தூக்குத்தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது.


நாமக்கல் அருகே ஒருவந்தூா் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் புதிய தூக்குத்தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது.

ஒருவந்தூா் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் புதிய தூக்குத்தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரில் பிரசித்த பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும், பரிவாரத் தெய்வங்களாக கருப்பசுவாமி, கன்னிமாா், இசக்கியம்மன் போன்ற தெய்வங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தையொட்டி இந்த கோயிலில் தோ்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

திருவிழாவின்போது உற்சவ மூா்த்தியான பிடாரி செல்லாண்டியம்மன் தூக்குத்தேரில் வீதி உலா வருவது வழக்கம். இதனையொட்டி, கோயிலில் உள்ள அம்மனின் சூலாயுதம் மற்றும் பூஜை பொருள்கள் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் சென்று வரும். இந்த ஆண்டுக்கான தோ்த்திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக 27 அடி உயரத்தில் புதிய தூக்குத்தோ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தயாரிக்கப்பட்ட இடத்தில் இருந்து தோ் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையிலும், வெள்ளோட்டமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story