பி.கே.புரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா

பி.கே.புரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா

கெங்கையம்மன்

பி.கே.புரம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரம் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பிள்ளையார் கோயிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தின்போது அலகு குத்தி, அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவித்தனர். கரகம், அம்மன் சிரசு, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, கோவிலில் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, கண்திறப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குழந்தைகளை அம்மன் மடியில் அமரவைத்து ஆசி பெறுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெற்றன. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, கூழ்வார்த்தல், கும்பசோறு படைத்தல், பொங்கல் வைத்தல் நடைபெற்றன.

Tags

Next Story