கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம்- ஆட்சியர் தகவல்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம்- ஆட்சியர்  தகவல்

மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை விழுப்புரத்தில் நடக்கிறது


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ,கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு மூன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் 19.08.2023, 28.10.2023 மற்றும் 23.12.2023 ஆகிய தேதிகளில் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் வேலைவாய்ப்பு முகாம் 19.08.2023 அன்று நடத்தி முடிக்கப்பட்டது. இதன் இரண்டாம் நிகழ்வாக, 28.10.2023 சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செஞ்சி, அல்ஹிலால் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 150 க்கும் மேற்பட்ட முன்ணனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர். நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இச்சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 04146-226417, 9499055906 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 28.10.2023 சனிக்கிழமை நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story