தாய்மார்களுக்கான திட்டங்களை தீட்டுவது தான் திராவிட மாடல் -எ.வ.வேலு

கலைஞர் நூற்றாண்டு விழா
கலைஞரின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருவண்ணாமலையில் 1 முதல் 9 வார்டுகளை உள்ளடக்கிய பொது மக்களுக்கு கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மத்தளாங்குள தெருவில் நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன். மாவட்ட பொருளாளர் எஸ். பன்னீர்செல்வம். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர அவைத் தலைவர் சி.சண்முகம், நகர துணை செயலாளர்கள் மு. கருணாமூர்த்தி, வட்டி அருணாசலம், ஜீவரேகா விஜயராஜ், நகர பொருளாளர் ந.சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி குட்டி க.புகழேந்தி, அ.கண்ணன், இல குணசேகரன், கோல்ட் பிரபு, ஹக்கீம் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 4-வது வார்டு கவுன்சிலர் ராணி முருகன் அனைவரையும் வரவேற்றார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது, எல்லோருக்கும் எல்லாம் சமம் என கருதுவது தான் திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு முதல்வரின்ஆணைக்கிணங்க கேரள மாநிலம் வைக்கத்தில் நம்மை எல்லாம் ஆளாக்கிய தந்தை பெரியாரின் நினைவாக நூலகம் கட்ட வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு ஆணை பிறப்பித்ததின் அடிப்படையில் தொடர்ந்து அப்பணிகள் முழுமையாக முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறினார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடவில்லை என்றால் நாம் அனைவரும் நன்றிகெட்டவர்களாக ஆகிவிடுவோம். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 38 வருவாய் மாவட்டங்களும், 21 மாநகராட்சிகளும், 135-க்கும் மேற்பட்ட நகராட்சிகளும், 550 க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளும், 12500 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளும் உள்ள நிலையில் அனைத்து ஊர்களிலும் பள்ளிக்கூடம், மருத்துவமனை, குடிநீர் தொட்டி, தாலுக்கா அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள். போக்குவரத்து மண்டலங்கள் என கலைஞரின் அடையாளங்கள நிலைத்து நிற்கிறது என்று பட்டியலிட்டு பேசினார். வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்த திருவண்ணாமலையை தனியாகப் பிரித்து திருவண்ணாமலை மாவட்டமாக தந்தவர் கலைஞர் என்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போக்குவரத்து மண்டலம் மட்டுமின்றி கோவில் இருந்தால்தான் தேர் இழுக்க முடியும் என்று பேசிய அவர் கலைஞரின் முயற்சியால்தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலை தொல்பொருள் துறையிடம் இருந்து மீட்டுகப்பட்டது. ஆகையால்தான் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டும், அதற்காகத்தான் கலைஞருக்காக நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் என்று கூறினார். குக்கர் உணவு இன்றி யாராலும் வாழ முடியாது என்றும் உணவு சமைக்கும் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் சமையல் அறைக்கு செல்லும் பொழுது குக்கர் இன்றி சமைக்க முடியாது என்பதால் தான் குக்கரை நலத்திட்ட உதவியாக வீடு வீடாக சென்று வழங்கி வருவதாகவும் விளக்கமளித்தவர் குக்கரை பார்க்கும்போதெல்லாம் கலைஞர் ஞாபகம் தாய்மார்களுக்கு வரும் என்றும் கூறினார். பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் ஸ்டாலினிடம் விரைவில் ஆண்களும் எங்களுக்கும் ஏதேனும் செய்யுங்கள் என்று மனு கொடுக்கும் நிலை தற்போது வந்துள்ளதாக பேசிய அவர் தாய்க்கு நிகரான உறவு கிடையாது என்றும் கடவுளுக்கு நிகரானவர்கள் தாய்மார்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் தாய்மார்களுக்கு திட்டம் தீட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியின் கடமை என்றும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஏ.ஆறுமுகம், சு விஜி (எ) விஜயராஜ். சர்தார், எஸ், கண்ணதாசன், கிரிக்கெட்ரவி, கோவிந்தன், எழில்மாறன். கஜபதி, வி.எஸ், ரவீந்திரன், டி.எல்.எம்.வினோத்குமார், எஸ்.கே.டி. வீரா. ம.செந்தில், டி.என். மனோகரன். ஏ.வடிவேல், உதயாரவி, நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜங்கம், எஸ்.வி,ஆர். மணிகண்டன், ராயல் தியாகு உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.
