திருப்போரூர் : மண்ணரிப்பை தடுக்க ஆறுவழிச்சாலையில் மரக்கன்றுகள் நடவு

திருப்போரூர் : மண்ணரிப்பை தடுக்க ஆறுவழிச்சாலையில் மரக்கன்றுகள் நடவு
அதிகரித்து வரும் மண்ணரிப்பை தடுக்க ஆறுவழிச்சாலையில் மரக்கன்றுகள் நடவு
புறவழிசாலையில் மண்ணரிப்பை தவிர்க்க மரங்களை நட்டு பராமரித்து வருகிறது தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம்

திருப்போரூர் ஒன்றியத்தில், படூர் முதல் -தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள காலவாக்கம் -- ஆலத்துார் ஊராட்சியில் உள்ள வெங்கலேரி இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, படூர் -- தையூர் இடையிலான புறவழிச்சாலை, 4.67 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், காலவாக்கம் - வெங்கலேரி இடையிலான புறவழிச் சாலை, 7.45 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு புறவழிச் சாலைகளுக்கும் சேர்த்து, மொத்தம் 465 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில், திருப்போரூர் வழியாக காலவாக்கம் - வெங்கலேரி இடையில் நடைபெறும் புறவழிச்சாலை பணி, 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மற்ற பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, இச்சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மழைக்காலங்களில் இந்த புறவழிச்சாலை ஓரம் அதிக அளவில் மண்ணரிப்பு ஏற்படுகிறது. சாலையோர மண் அரிப்பை தடுக்கவும், மழை வளத்தை பெருக்கவும், வாகன ஓட்டிகளுக்கு நிழலாக அமையவும், மரக்கன்றுகள் நட தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, சாலையின் இரு புறமும், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து, அதற்கு பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்கப்படுகிறது.

Tags

Next Story