மரக்கன்றுகள் நடும் பணிகளை கலெக்டர் துவக்கி வைத்தார்
மரக்கன்று நடும் பணி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தராஜபட்டினம் பகுதியில் சுமார் 2 ஹெக்டர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் 25.06.2024) தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது பெரம்பலூர் மாவட்டத்தை பசுமைப் போர்வை போர்த்தப்பட்ட மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு அந்த இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து மரக்கன்றுகள் நடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தராஜபட்டினம் கிராமத்தில் சுமார் 2 ஹெக்டர் பரப்பளவிலான இடத்தில் கம்பி வேலி போடப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
. சுமார் 6 மாதங்களுக்கு முன்பாக இதே பகுதியில் ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது நல்ல நிலையில் வளர்ந்துள்ளது.