கருப்படிதட்டடை ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடவு

கருப்படிதட்டடை ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடவு
மரக்கன்று நடும் விழா 
கருப்படிதட்டடை ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதேபோல, காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தததால், மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

இதனால், காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி தலைவர் பொன்னா கூறியதாவது: ஊராட்சியில் காலியாக உள்ள இடங்களில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேம்பு, கொய்யா, புங்கன்,

நாவல், மா உள்ளிட்ட 1,000 மரக்கன்று நடவு செய்ய முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, ஊராட்சியில் உள்ள அனைத்து சாலையோரங்களிலும் மரக்கன்று நடப்பட உள்ளது. பஞ்சுபேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில், நேற்று மரக்கன்றுகளை நடவு செய்து, ஆடு, மாடுகள் மேயமாக இருக்க சீமைகருவேல மரங்களால் பாதுகாப்பு வேலி அமைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story