தெடாவூர் பேரூராட்சியில் 625 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தெடாவூர் பேரூராட்சியில் 625 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
தெடாவூர் 
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி வனத்துறை சார்பில், தெடாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள 'மரகத பூஞ்சோலை' திட்டத்தின்கீழ் அத்தி, மந்தாரை, பலா, புன்னை, அரசு, கொய்யா, வெண்கடம்பு, புளி, வேங்கை உள்ளிட்ட 55 வகையில் 625 மரக்கன்றுகள் சுமார் ஒரு ஏக்கர்பரப்பில் தெடாவூர் பேரூராட்சிதலைவர் வேல், வனசரகர் சிவக்குமார் ஆகியோர் நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தெடாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன்,வனவர் தனபால், வனக்காப்பாளர் பச்சமுத்து, கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி, அனந்தகுமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story