தர்மபுரி-மொரப்பூர் நான்கு வழிச் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடல்

தர்மபுரி-மொரப்பூர் இடையே புதிதாக அமைந்த நான்கு வழிச் சாலையோரம், 10ஆயிரம் மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத்துறையினர் நட்டனர்.

தர்மபுரி முதல் திருவண்ணாமலை இடையே புதிய நான்கு வழிச்சாலையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள். தர்மபுரி, டிச.15: தர்மபுரி-மொரப்பூர் இடையே புதிதாக அமைந்த நான்கு வழிச் சாலையோரம், 10 ஆயிரம் மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத்துறையினர் நட்டுள்ளனர். த

ர்மபுரியில் இருந்து மொரப்பூர், அரூர் வழியாக, புதியதாக நான்கு வழிச்சாலை திருவண்ணாமலை வரை சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மதிகோண்பாளையம், ராஜா பேட்டை, இந்த செட்டிக்கரை, சோலைக்கொட்டாய், ஒடசல்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், அரூர்,தீர்த்தமலை, தாணிப்பாடி, வழியாக திருவண்ணாமலை வரை 113 கிலோ மீட்டர் தூரம், இந்த புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. த

ற்போது 95சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மொத்தம் ரூ410கோடி மதிப்பீட்டில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரத்திற்கு, இந்த சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி-மொரப்பூர் வரை, சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, சாலையோரம் இருந்த சுமார் 2800 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு, சாலை அகலப்படுத்தப்பட்டது. தற்போது சாலை பணிகள் முடிந்த இடங்களில், சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் மரக்கன்றுகள், சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறை நட்டுள்ளது. பணிகள் முடிந்ததும், மற்ற இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story