சிவகாசியில் நாட்டு மரக்கன்று நடும் விழா - அமைச்சர்கள் பங்கேற்பு...
மரக்கன்று நடும் விழா
சிவகாசி அருகே நாட்டு மரங்களால் உருவாக்கப்படும் 'விஸ்வ வனம்' துரை வைகோ தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக 32 ஏக்கர் நிலம் உள்ளது. பராமரிப்பு இல்லாமல் கிடந்த இந்த இடத்தில் செயற்கை காடு உருவாக்கும் பணியில், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து விஸ்வ வனம் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலமாக முதல் கட்டமாக 7 ஏக்கர் நிலப் பரப்பளவில் நாட்டு மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று தொடங்கியது. 7 ஏக்கரிலும் சொட்டுநீர் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ மரக்கன்றுகளை மரக்கன்றுகளை நட்டு வைத்து, விஸ்வ வனம் திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் விவேகன்ராஜ், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் மற்றும் சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், விஸ்வநத்தம் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story