உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மதுரை மங்கையர்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மங்கையர்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்க்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் எக்ஸ்னோரா மற்றும் கிரீன் டிரீம் சங்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் மாசு இல்லாத மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதிலும், மாணவர்களை பசுமை உறுதிமொழியில் ஈடுபடுத்துவதற்காக இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் அசோக் குமார், நிர்வாக இயக்குனர் சக்திபிரனேஷ், கல்லூரியின் முதல்வர் உமாபாஸ்கர் மற்றும் கல்விப்புலத் தலைவி செந்தூர் பிரியதர்ஷினி, ஆகியோர் பசுமை உறுதிமொழி எடுத்து மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

கிரீன் டிரீம் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முத்துச்செல்வி மற்றும் சுபஸ்ரீ ஆகியோர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர்.

Tags

Next Story