நாமக்கல்லில் ஒருகோடி பனை விதைகள் நடும் நிகழ்வு

வளையப்பட்டி பகுதியில் ஒரு கோடி பனை விதைகள் நட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நிகழ்வை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு உட்பட்ட மோகனூர், பரளி, வளையபட்டி ,லத்துவாடி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். விளை நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிப்காட்க்கு எதிர்ப்பு குழுவினர் இன்று வளையப்பட்டி பகுதியில் ஒரு கோடி பனை விதைகள் நட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நிகழ்வை நடத்தினர். அதன்படி வளையப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் பனை விதைகளை நட்டு வைத்தனர் .

மேலும் சிப்காட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களையும் எழுப்பி பனை விதை நடும் நிகழ்ச்சி நிகழ்வில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூறுகையில் , ஒரு வருடத்திற்குள் அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லாமல் விவசாய நிலங்களில் ஒரு கோடி பனை விதைகளை நடும் நிகழ்வில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story