பெரம்பலூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

மரக்கன்று நடும் பணி

பெரம்பலூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 184.81 ஏகபெரம்பலூர் மாவட்டத்தில் பசுமைப் பரப்பளவினை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மாவட்டம் முழுவதும் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள், காப்புக்காடுகள் என அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட அறிவுறுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், முதற்கட்டமாக வட்டம் வாரியாக அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், . பெரம்பலூர் மாவட்டத்தில்ஆலத்தூர் பெரம்பலூர் வேப்பந்தட்டை வேப்பூர் ஆகிய நான்கு வட்டத்திலும் மொத்தம் 82 இடங்களில் 184.81 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் சமூக அலுவலர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் ஈடுபட்டு மாவட்டத்தில் பசுமைப் பரப்பளவினை அதிகப்படுத்த வேண்டும் என வெளியிட்டுள்ள தகவலை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story