ஊராட்சி அலுவலக கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

ஊராட்சி அலுவலக கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள் 

காஞ்சிபுரம் அடுத்த, ஒழுக்கோல்பட்டு ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே, ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளது. இந்த ஊராட்சி அலுவலக கட்டடம், 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், கட்டடம் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. கட்டட விரிசலில் ஆலமரம் மற்றும் அரச மரங்களின் செடிகள் வளர்ந்து, கட்டடத்தை மேலும் பலவீனப்படுத்தி வருகிறது. இதனால், மழைக்காலத்தில் கட்டடத்தின் சுவர் மற்றும் கூரையில் தண்ணீர் கசிவு ஏற்படுவதால், ஊராட்சி நிர்வாகத்தின் முக்கிய கோப்புகளை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, ஒழுக்கோல்பட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, ஒழுக்கோல்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறுகையில், 'அரசிடம் கேட்டுள்ளோம். ஒப்பதல் கிடைத்த பின் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்."

Tags

Next Story