சிவகங்கை நகர் பகுதியில் தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

சிவகங்கை நகர் பகுதியில் தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

தேங்கி நிற்கும் குப்பைகள்

சிவகங்கை நகர் பகுதியில் தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பாட்டில்களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை நகரில் 27 வார்டுகளில் உள்ள மழைநீர் செல்லும் வடிகால்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளால் நிரம்பி கிடக்கிறது. இதனால் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் வருடக்கணக்கில் தேங்கி கிடக்கும் அவலம் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்கள் பரப்பும் இடமாக மாறியுள்ளது.

சிவகங்கை நகராட்சி முறையாக தூய்மை பணி செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதால் நகரில் எந்த பகுதியிலும் குப்பை கழிவுகள் அகற்றபடாமல் குறிப்பாக வாரச்சந்தை ரோடு, சிவன் கோவிலை சுற்றிலும் சாக்கடை கழிவு நீர் இந்த சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் நிரம்பி வழிகிறது.

நகராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை அகற்றி நகரில் உள்ள மழைநீர் செல்லும் வடிகால்களை தூய்மையான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story