திண்டுக்கலில் சாலையோரங்களில் எரியும் பிளாஸ்டிக் கழிவு

திண்டுக்கலில் சாலையோரங்களில் எரியும் பிளாஸ்டிக் கழிவு

எரியும் கழிவுகளால் பொதுமக்கள் அவதி

திண்டுக்கலில் சாலையோரங்களில் எரியும் பிளாஸ்டிக் கழிவுகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு நோய் தொற்றுக்கும் வழிவகுக்கிறது.

தொடரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டம் முழுவதும் கிராமம்,நகர் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கடை நடத்துவோர் இரவு நேரங்களில் பைபாஸ்ரோடுகளில் கொண்டு கொட்டுகின்றனர்.

பெரும்பாலான பைபாஸ் ரோட்டோரங்களில் குப்பை மலை போல் குவிந்துள்ளது. அருகில் வசிப்பவர்கள் தீயில் எரிக்கின்றனர்.பிளாஸ்டிக் குப்பையிலிருந்து வெளிவரும் கரும்புகை அருகிலிருக்கும் குடியிருப்புகள்,வாகனங்களில் கடந்து செல்வோர் கண்கள்,மூக்குகளில் புகுந்து தொற்றுநோயை பரப்புகிறது.

Tags

Next Story