கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பாட்டனர்.

10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த கோரியும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்சல் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பணப்பலத்துடன் கூடிய மூன்று கட்ட பதவி உயர்வு, 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக்கொடை 5 லட்சம், குரூப் இன்சூரன்ஸ் 5 லட்சம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story