விழுப்புரத்தில் குளமாக மாறிய விளையாட்டு மைதானம்.

விழுப்புரத்தில் குளமாக மாறிய விளையாட்டு மைதானம்.

மழை நீர் தேங்கி நிற்கும் மைதானம்

விழுப்புரம், கட்ட பொம்மன் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் கட்ட பொம்மன் நகர் உள்ளது. இந்நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் தினமும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சியையும், உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் அம்மைதானத்தில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. அதோடு மைதானத்திற்கு அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் அதில் கழிவுநீர் நிரம்பியதில் திடீரென வாய்க் காலில் உடைப்பு ஏற்பட்டு மைதானம் முழுவதும் கழிவுநீர், குளம் போல் தேங்கியது. மழை ஓய்ந்து 5 நாட்களாகியும் அந்த கழிவு நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவ தால் இரவில் கொசுத்தொல்லையால் அப்பகுதி மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் தூக்கத்தை தொலைத்து மிகவும் அவதிப் பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தேங்கி நிற்கும் கழிவுநீரில் நாய்கள், பன்றிகள் மேய்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவ தால் அப்பகுதி பொதுமக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மைதானத்தில் குளம்போல் கழிவு நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் விளை யாட முடியாமலும், உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமலும் தவிக்கின்றனர். எனவே இம்மைதானத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றக்கோரி அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்போக்குடன் உள் ளனர். ஆகவே தேங்கியிருக்கும் கழிவுநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்துவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story