ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் தரணும் !

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் தரணும் !

 ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு விளையாட்டு துறையில் அங்கிகாரம் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு விளையாட்டு துறையில் அங்கிகாரம் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு விழாக்கள் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்துவது மிக பெரிய சிரமம் தான் அதேபோல் ஜல்லிக்கட்டிக்கு பாதுகாப்பு கொடுப்பது முன்னேற்பாடுகள் செய்வது சிரமம் தான். இருந்தாலும் போராடி எடுக்கக்கூடிய வெற்றிதான் பெரிய வெற்றி என்பதைப் போல ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றி இந்தியா முழுவதும் அல்ல உலக நாடுகளிலும் பேசப்படுகிறது.

குறிப்பாக இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு அதிகமாக நடைபெறுவதை நான் வரவேற்கிறேன். அதேபோல் ஜல்லிக்கட்டுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஊர் கூடி தேர் இழுப்பது போல ஜல்லிக்கட்டு விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடக்கும் கிராம கமிட்டி அதேபோல் பார்வையாளர்கள் ஒத்துழைப்பு அவசியம். ஜல்லிக்கட்டு எவ்வளவு தூரம் விமர்சையாக நடைபெறுகிறதோ, அதேபோல் காயம் ஏற்படும் போது மனதிற்கு அது வலியை தருகிறது. வீரர்களின் காயம் குறைவாகத்தான் உள்ளது ஆனால் பார்வையாளர்களின் காயம் அதிகமாக உள்ளது. அதனால் பார்வையாளர்களின் ஒத்துழைப்பு கூடுதலாக இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு உரிய விதிமுறை பின்பற்றி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டுக்கு பார்வையாளர்கள், காளையர்கள் காளைகளின் உரிமையாளர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து ஊர் பொது விழாவாக நடைபெற வேண்டும். ஜல்லிக்கட்டு தொடர்பாக பல கோரிக்கைகள் உள்ளது அது தொடர்பாக வருகின்ற சட்டமன்றத்தில் எனது குரல் ஜல்லிக்கட்டுக்காக ஓங்கி ஒலிக்கும். ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றியடையக் கூடிய வீரர்களுக்கு விளையாட்டு துறையில் அங்கிகாரம் கொடுத்து உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்த அரசு செவிசாய்க்க வேண்டும்.. என, புதுக்கோட்டை வடமலாப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிகட்டை பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.

Tags

Next Story