திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்புமுறை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள்,

மருத்துவ கல்லூரிகள் மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கொத்தடிமைத் தொழிலாளர் முறை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மத்தியில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பான விழிப்புவார்வு கருத்தரங்கு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

பொதுமக்கள் அதிகம் கூடும் திருப்பூர், பழைய பேருந்து நிலையப் பகுதியில் கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புளார்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே வழங்கப்பட்டது.

இது போல் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story