மத நல்லிணக்க உறுதிமொழி

மத நல்லிணக்க உறுதிமொழி

மத நல்லிணக்க உறுதிமொழி 

கோயம்புத்தூர் மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காந்தியடிகளின் நினைவு தினத்தை மத நல்லிணக்க தினமாக அறிவித்து தமிழக முதலமைச்சர் உறுதிமொழி ஏற்க கேட்டுக் கொண்டுள்ளார்.அதன்படி தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட திமுக சார்பில் வடகோவை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை வகித்தார்.மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும்‌ நிகழ்ச்சியில்மாவட்டக் நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள்,மேயர், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story