குழந்தை தொழிலாளர் முறையை அகற்றும் உறுதிமொழி 

குழந்தை தொழிலாளர் முறையை அகற்றும் உறுதிமொழி 
குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தினம் 
கன்னியாகுமரி எஸ்பி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தினம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ. சுந்தரவதனம் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா,குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம், கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள்,அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும்,அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story