பிளக்ஸ் பேனர்; விபத்துக்களில் சிக்கும் வாகனஓட்டிகள்

பிளக்ஸ் பேனர்; விபத்துக்களில் சிக்கும் வாகனஓட்டிகள்

திண்டுக்கலில் ஆங்காங்கே ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளுடன், வாகனங்களை நிறுத்தியும், பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டிருப்பதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.  

திண்டுக்கலில் ஆங்காங்கே ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளுடன், வாகனங்களை நிறுத்தியும், பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டிருப்பதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகளுடன் வாகனங்களை நிறுத்தியும், பிளக்ஸ் பேனர்களை அமைத்தும் உள்ளதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் , அப்பாவி மக்கள் பாதிக்கின்றனர். மாவட்டத்தில் கிராம ரோடுகள் , மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை யோர ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

முக்கிய நகர, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் சிறுகடைகள், தள்ளு வண்டிகளை நிறுத்துவது, சாலையை மறித்து வாகனங்களை நிறுத்துவது போன்ற தற்காலிக ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளின் பிளக்ஸ் போர்டுகள், போன்றவை சாலைகளில் செல்வோர், வாகன ஒட்டுநர்களின் கவனத்தை சிதறடிப்பதுடன், இரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

Tags

Next Story