மேற்படிப்பிற்கான பிரிவுகள் குறித்த ப்ளெக்ஸ் பேனர்

மேற்படிப்பிற்கான பிரிவுகள் குறித்த ப்ளெக்ஸ் பேனர்

ப்ளெக்ஸ் பேனர்

மேற்படிப்பிற்கான பிரிவுகள் குறித்த ப்ளெக்ஸ் பேனர்
செங்கல்பட்டு மாவட்டம், படூர் ஊராட்சி மன்றம் மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வியுடன் விளையாட்டு என பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.. குறிப்பாக 10, 12-ம் வகுப்பிற்கு பிறகு மாணவ மாணவியர் மேற்கொண்டு படிக்க வேண்டிய பாடப்பிரிவுகள் குறித்த பிளக்ஸ் பேனரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வைத்து மாணவ மாணவியரின் மேற்படிப்பிற்கான வழிகாட்டு முறைகளை அறிவித்துள்ளனர்.. குறிப்பாக அறிவியல் சார்ந்த படிப்பும் வணிகவியல் மருத்துவம் சட்டம், நிதி நிர்வாகம் எந்தப் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் எந்தெந்த கல்லூரியை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தொடர்பு எண்ணோடு வழிகாட்டி வருகின்றனர்.. இது குறித்து கருத்து தெரிவித்த படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் 12 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் மேற்படிப்பிற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம் பெற்றோர்களுடன் வருகை தந்து ஆலோசனைகளை பெற்று நல்லதொரு கல்லூரியில் சேர்ந்து மாணவ மாணவியர் நன்கு கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.. நிகழ்வில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே ஏ எஸ் சுதாகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story