"ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி"

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி

"ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி"

காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்தில், கோவில் மற்றும் தெப்பக் குளங்களில் உழவாரப்பணி
காஞ்சிபுரத்தில், 1998ல் துவக்கப்பட்ட அப்பர் இறைப்பணி அறக்கட்டளையில், 100க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினர் மாதந்தோறும், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்தில், கோவில் மற்றும் தெப்பக் குளங்களில் உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு தென்கோடியில், கோடி ருத்ரர்கள் வழிபட்ட ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர். இதில், கோவில் வளாகத்தில் புதர்போல மண்டிக்கிடந்த செடி, கொடிகள் அகற்றி, கூரையை சுத்தம் செய்தனர். மேலும், கோவில் வெளிப்புற சுற்றுச்சுவருக்கு வெள்ளை அடித்தனர். தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உழவாரப் பணி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ஜெயகுமார் தலைமை வகித்தார். தேசிய செயலர் சுரேஷ்ஜி முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கோவில் வளாகம் மற்றும் பூஜை பொருட்களை சுத்தம் செய்தனர்.

Tags

Next Story