பிளஸ்-1 தேர்வு - திருப்பூர் மாவட்டதிற்கு 3வது இடம்

பிளஸ்-1 தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் மொத்த தேர்ச்சி விகிதத்திலும், அரசு பள்ளிகள் தேசிச்சி விகிதத்திலும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வை ஆண்கள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 1,952 பேரும், பெண்கள் பள்ளியை சேர்ந்த 4,431 மாணவிகளும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த 19, 781 பேரும் என மொத்தம் 26,164 பேர் எழுதினர். இதில் 24,917 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 1702 பேரும், மாணவிகள் 4237 பேரும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் என மொத்தம் 18,978 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 95.23 சதவீதம் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அரசு பள்ளிகள் அளவிலும் 92.06 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 78 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 5 ஆயிரத்து 666 பேரும், மாணவிகள் 6746 பேரும் என மொத்தம் மொத்தம் 12,412 பேர் தேர்வு எழுதினர். இதில் 5001 மாணவர்களும், 6426 மாணவிகளும் என மொத்தம்11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

Tags

Next Story