பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று துவங்கியது !

பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று துவங்கியது !
X

பிளஸ் 1 பொதுத் தேர்வு 

பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று துவங்கி நீலகிரி மாவட்டத்தில் 6400 மாணவர்கள் தேர்வெழுதினர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ்- 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுத தகுதி உடையவர்களுக்கு 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதில் தேர்வு எழுத தகுதியாக அறிவிக்கப்பட்ட 6475 பேரில் 6400 கலந்து கொண்டனர். 75 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதேபோல் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 22 பேரில் 4 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்நிலையில் 43 முதன்மை கண்காணிப்பாளர்கள், 61 துறை அலுவலர்கள், 82 அலுவலக பணியாளர்கள், 350 அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் 15 பேர் என 531 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story