பிளஸ் 1 பொதுத் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 18,287பேர் தேர்வெழுதினர்

பிளஸ் 1 பொதுத் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 18,287பேர் தேர்வெழுதினர்
X

தேர்வு எழுதும் மாணவிகள்

பிளஸ் 1 பொதுத் தேர்வை நாமக்கல் மாவட்டத்தில் 18,287பேர் தேர்வெழுதினர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ்- 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது

. இதை தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு நேற்று தொடங்கியது. இத்தோ்வை 18,287 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதனையடுத்து, பிளஸ் 1 பொதுத்தோ்வு நேற்று திங்கள்கிழமை (மாா்ச் 4) தொடங்கி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வை 9,151 மாணவா்களும் 9,305 மாணவிகளும் என மொத்தம் 18,456 போ் எழுதுவதற்காக 85 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், திங்கள்கிழமை தொடங்கிய மொழித்தோ்வை 18,287 மாணவ, மாணவிகள் எழுதினா்.

165 போ் பங்கேற்கவில்லை. 85 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 1,200 அறை கண்காணிப்பாளா்கள், பறக்கும் படையினா் தோ்வு மையங்களை கண்காணித்து வருகின்றனா்.

Tags

Next Story