பிளஸ் -1 பொதுத்தேர்வு ; நீலகிரியில் 91.37% தேர்ச்சி!

பிளஸ் -1 பொதுத்தேர்வு ; நீலகிரியில் 91.37% தேர்ச்சி!

பைல் படம் 

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 91.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே 10-ம் மற்றும் 12-ம் வகுப்புகளுடன் பிளஸ்-1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த பத்தாம் தேதி வெளியானது. இந்நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் இந்த பொதுத்தேர்வை 2990 மாணவர்கள், 3416 மாணவிகள் என 6406 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 2622 மாணவர்கள், 3231 மாணவிகள் என மொத்தம் 5853 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவர்கள் 87.69 சதவீதமும், மாணவிகள் 94.58 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 91.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.23 சதவீதம் அதிகம். மாநில அளவில் 18-வது இடத்தை பிடித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 38 அரசு பள்ளிகளில் 2293 பேர் தேர்வு எழுதினர். இதில், 1944 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் 84.78 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் 22- வது இடமும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 26-வது இடமும் பிடித்தது. தற்போது பிளஸ்-1 தேர்வில் 18-வது இடம் பிடித்துள்ளது.

Tags

Next Story