பிளஸ் 1 பொது தேர்வு : மாநிலத்தில் 4 வது இடம் - 95.06 % தேர்ச்சி

பிளஸ் 1 பொது தேர்வு : மாநிலத்தில் 4 வது இடம் -  95.06 % தேர்ச்சி
பைல் படம் 
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் 95.06 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் நான்காவது இடத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் /ஏப்ரல் 2024 -ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 223 பள்ளிகளைச் சேர்ந்த 98 தேர்வு மையங்களில் 10,441 மமாணவர்களும், 11,887 மாணவியர்களுமாக மொத்தம் 22,328 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 9656 மாணவர்களும், 11,568 மாணவியர்களும் என மொத்தம் 21,224 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விழுக்காடு 95.06 சதவீதம் பெற்று தேர்ச்சி சதவீதத்தில் தமிழ்நாட்டில் 4-ஆவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.

மேலும், அரசுப் பள்ளிகள் 7, சமூக நலப்பள்ளிகள் 1, உதவி பெறும் பள்ளிகள் 16, பதின்மப் பள்ளிகள் 37 என மொத்தமாக 61 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் எம்.லோகேஷ் என்ற மாணவர் 596/600 மதிப்பெண்களும் அதனைத் தொடர்ந்து ஆர்.மணீஷ் என்ற மாணவர் 593/600 மதிப்பெண்களும் அதனை தொடர்ந்து வி.ஸ்ரீசக்திகோமதி, கே.அபர்ணா, எம்.சஷ்சித்ராம், கே.லக்சனா ஆகிய மாணவர்கள் 592/600 மதிப்பெண்களும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

இயற்பியல் பாடத்தில் 24 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 7 மாணவர்கள், கணித பாடத்தில் 14 மாணவர்கள், கணினி அறிவியல் பாடத்தில் 121 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 1 மாணவர்,வரலாறு பாடத்தில் 2 மாணவர்கள், பொருளியல் பாடத்தில் 16 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 10 மாணவர்கள், கணக்குப் பதிவியல் பாடத்தில் 9 மாணவர்கள், வணிக கணிதம் பாடத்தில் 7 மாணவர்கள், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 12 மாணவர்கள், அடிப்படை மின் பொறியியல் பாடத்தில் 7 மாணவர்கள், அடிப்படை இயந்திரவியல் பாடத்தில் 35 மாணவர்கள், செவிலியல் பாடத்தில் 63 மாணவர்கள், ஆடை வடிவமைப்பு பாடத்தில் 58 மாணவர்கள், வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்தில் 6 மாணவர்கள், தட்டச்சு பாடத்தில் 42 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்.

Tags

Next Story